குருவிரொட்டி இணைய இதழ்

பெருமை பெருமிதம் இன்மை – குறள் : 979

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.    – குறள்: 979

                           – அதிகாரம்: பெருமை, பால்: பொருள்

விளக்கம்:

ஆணவமின்றி   அடக்கமாக    இருப்பது    பெருமை    எனப்படும்.  ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்.

உதாரணம் (விளக்கப்படம்):
விளக்கப் படத்தில் உள்ள சிறுமியை விட, அளவில் பல மடங்கு பெரியதாகவும், வலிமை வாய்ந்ததாகவும் இருப்பது யானை.
ஆனாலும், அந்த யானை, தான், சிறுமியை விட அதிக வலிமை மிக்கது என்ற ஆணவம் இல்லாமல், அன்புடனும், பணிவுடனும், சிறுமிக்குத் தலை வணங்குவது, அந்த யானையின் பெருமையைக் காட்டுகிறது.