குருவிரொட்டி இணைய இதழ்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.      – குறள் – 482

- அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்

கலைஞர் உரை

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

மு. வரதராசனார் உரை

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

உதாரணப்பட விளக்கம்

‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பது பழமொழி. காற்று வீசும் காலம் அறிந்து, அதற்கேற்பச் செயல்பட்டால்தான், நெல்லிலிருந்து / தானியத்திலிருந்து, பதர், உமி, வைக்கோல், புல் செத்தை போன்ற பயனற்ற பொருட்களை நீக்க முடியும். அதுபோல, எந்த செயலைச் செய்வதற்கும், அதற்கேற்ற காலத்தை அறிந்து, செயல்பட வேண்டும். காலத்திற்கேற்ற அந்த முயற்சியே, வெற்றியை நழுவ விடாமல் உறுதியாக நமக்குப் பெற்றுத் தரும்.