குருவிரொட்டி இணைய இதழ்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் – குறள்: 789


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
– குறள்: 789

– அதிகாரம்: நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால், ஒருபோதும் வேறுபடாது இயன்ற வழியெல்லாம் தன் நண்பனுக்கு உதவி, அவன் எவ்வகையிலுந் தளராதவாறு தாங்கும் உறுதியாம்.



மு. வரதராசனார் உரை

நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.



G.U. Pope’s Translation

And where is friendship’s royal seat? In stable mind,
Where friend in every time of need support may find.

 – Thirukkural: 789, Friendship, Wealth