குருவிரொட்டி இணைய இதழ்

முனைமுகத்து மாற்றலர் சாய – குறள்: 749


முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண்.
– குறள்: 749

– அதிகாரம்:அரண், பால்: பொருள்



கலைஞர் உரை

போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்து
கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போர்த் தொடக்கத்திலேயே பகைவர் புண்பட்டு விழுமாறு; நொச்சியாரின் வினைவேறுபாடுகளாற் சிறப்புப் பெற்று; மாண்டது பல்வேறு உறுப்புக்களாலும் மாட்சிமைப்பட்டதே சிறந்த கோட்டையரணாவது.



மு. வரதராசனார் உரை

போர்முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல் வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.



G.U. Pope’s Translation

At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious day.

 – Thirukkural: 749, The Fortification, Wealth