குருவிரொட்டி இணைய இதழ்

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் – குறள்: 134


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்.
– குறள்: 134

– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்
கொள்ள முடியும்;   ஆனால், பிறப்புக்குச்    சிறப்பு    சேர்க்கும்
ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.  



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பார்ப்பனன் தான் கற்றதை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும்; ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு, தமிழ் ஒழுக்கங் குன்றின் கெடும் .



மு. வரதராசனார் உரை

கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.



சொற்பொருள்:  பார்ப்பான் / பார்ப்பனன் என்பது தூய தமிழ்ச்சொல். பார்த்தல் என்பதன் பொருள் இன்றும் வழக்கில் உள்ளது. உதாரணமாக, ஏடுபார்த்தல், கணக்குப் பார்த்தல், குறிபார்த்தல், சகுனம் (சொகினம்) பார்த்தல். இவ்வாறு பார்க்கும் தொழில் செய்பவனை பொதுவாகப் பார்ப்பான் என்று வழங்கினர். மேலும் இச்சொல்லின் பொருள் பற்றிய விவரங்களுக்குப் பின்வரும் நூலைப் பார்க்கவும்: “திருக்குறள், வாழ்வியல் விளக்கவுரை, தொகுதி-1, ஆசிரியர்: புலவர் இரா. இளங்குமரனார், பாவேந்தர் பதிப்பகம்”.



G.U. Pope’s Translation

Though he forget, the Brahman may regain his Vedic lore; Failing in ‘Decorum due,’ birthright’s gone for evermore.

 – Thirukkural: 134,The Possession of Decorum, Virtues