குருவிரொட்டி இணைய இதழ்

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் – குறள்: 758


குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை.
– குறள்: 758

– அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது
யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக்
கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப்
போன்று இலகுவானது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் கையிற் பொருளை வைத்துக்கொண்டு ஒரு வினையை மேற்கொண்டவன் அதைச் செய்தல்;ஒருவன் மலைமேலேறியிருந்து அடிவாரத்தில் நடக்கும் யானைப்போரைக் கண்டாற் போலும்.



மு. வரதராசனார் உரை

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தல், மலையின்மேல் ஏறி, யானைப் போரைக் கண்டாற் போன்றது.



G.U. Pope’s Translation

As one to view the strife of elephants who takes his stand, On hill he’s climbed, is he who works with money in his hand.

 – Thirukkural: 758, Way of Accumulating Wealth, Wealth