குருவிரொட்டி இணைய இதழ்

கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால் – குறள்: 686


கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால்
தக்கது அறிவதுஆம் தூது.
– குறள்: 686

– அதிகாரம்: தூது, பால்: பொருள்



கலைஞர் உரை

சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்
தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வேற்றரசரிடம் பல செய்திகளைச் சொல்லவேண்டியிருக்கும்; போது மூலவகையாலும் ஒப்புமை வகையாலும் சுருக்கவகையாலும் தொகுத்துச் சொல்லியும் வெறுப்பான செய்திகளைச் சொல்லும்போது கடுஞ் சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனமகிழச் சொல்லியும்; தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே நல்ல தூதனாவன்.



மு. வரதராசனார் உரை

பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.



G.U. Pope’s Translation

He is the best who knows what’s due, the time considered well,
The place selects, then ponders long ere he his errand tell.

 – Thirukkural: 686, The Envoy, Wealth