குருவிரொட்டி இணைய இதழ்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை – குறள்: 1044


இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொல்பிறக்கும் சோர்வு தரும். – குறள்: 1044

– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வறுமை; தொன்று தொட்டுப் பண்பட்டு வந்த நற்குடியிற் பிறந்தவர் வாயிலும்; இழிவுதரும் சொல்லைத் தோற்றுவித்தற் கேதுவான தளர்ச்சியை உண்டு பண்ணும் .



மு. வரதராசனார் உரை

வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கிவிடும்.



G.U. Pope’s Translation

From penury will spring, ‘mid even those of noble race, Oblivion that gives birth to words that bring disgrace.

 – Thirukkural: 1044, Poverty, Wealth