குருவிரொட்டி இணைய இதழ்

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் – குறள்: 180


இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.
– குறள்: 180

– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்



கலைஞர் உரை

விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பின் விளைவதை எண்ணிப்பாராது ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின், அக்கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; பிறன் பொருளை விரும்பாமை யென்னும் பெருமிதம் ஒருவனுக்கு வெற்றியைத் தரும்.



மு. வரதராசனார் உரை

விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.



G.U. Pope’s Translation

From thoughtless lust of other’s goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still.

 – Thirukkural: 180, Not Coveting, Virtues