குருவிரொட்டி இணைய இதழ்

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் – குறள்: 564


இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
– குறள்: 564

– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால்
கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நம் அரசன் கொடியவன் என்று குடிகளாற் சொல்லப்படும் துன்பந்தருந் சொல்லைத் தோற்றுவிக்கும் அரசன்; வாழ்நாள் குறைந்து தன் செல்வத்தையும் விரைந்திழப்பான்.



மு. வரதராசனார் உரை

‘நம் அரசன் கடுமையானவன்’ என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.



G.U. Pope’s Translation

‘Ah! cruel is our king’, where subjects sadly say, His age shall dwindle, swift his joy of life decay.

 – Thirukkural: 564, Absence of Terrorism, Wealth