குருவிரொட்டி இணைய இதழ்

இன்பம் ஒருவற்கு இரத்தல் – குறள்: 1052


இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். – குறள்: 1052

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம்
எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து
பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இரந்த பொருள்கள் ஈவாரது பண்பாட்டினால் வாய் திறக்கு முன்பே விரைந்து மகிழ்ச்சியோடு கிடைக்குமாயின்; ஒருவனுக்கு இரத்தலும் இன்பந்தருவதாம்.



மு. வரதராசனார் உரை

இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.



G.U. Pope’s Translation

Even to ask an alms may pleasure give,
If what you ask without annoyance you receive.

 – Thirukkural: 1052, Mendicancy, Wealth