குருவிரொட்டி இணைய இதழ்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – குறள்: 423

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.              – குறள்: 423

                                – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச்  சொன்னாலும், அதை
அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும், அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு.



மு. வரதராசனார் உரை

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.



G.U. Pope’s Translation

Though things diverse from divers sages' lips we learn,
'Tis wisdom's part in each the true thing to discern.

– Thirukkural: 423, The Possession of Knowledge, Wealth