குருவிரொட்டி இணைய இதழ்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் – குறள்: 355

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.      – குறள்: 355

           -அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம்


கலைஞர் உரை

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய
உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.


ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காட்சியுங் கருத்து மாகிய எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத்தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மையான இயல்பை அல்லது கருத்தை அறிந்து கொள்வதே மெய்யறிவாகும்.


மு. வரதராசனார் உரை

எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.


G.U. Pope’s Translation

Whatever thing, of whatsoever kind it be,
‘Tis wisdom’s part in each the very thing to see.

– Thirukkural: 353, Knowledge of the true, Virtues