குருவிரொட்டி இணைய இதழ்

என்பிலதனை வெயில் போலக் காயுமே – குறள்: 77


என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை யறம்.
– குறள்: 77

– அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறத் தெய்வம் அன்பில்லாத உயிரை எலும்பில்லாத உடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.



மு.வரதராசனார் உரை

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.



G.U. Pope’s Translation

As sun’s fierce ray dries up the boneless things,
So loveless beings virtue’s power to nothing brings.

– Thirukkural: 77, The Possession of Love, Virtues