குருவிரொட்டி இணைய இதழ்

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் -குறள்: 228


ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன் கணவர். – குறள்: 228

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்



கலைஞர் உரை

ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள்
அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி
மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்காரராலும் இழக்கும் கன்னெஞ்சர்; வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ!



மு. வரதராசனார் உரை

தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?



G.U. Pope’s Translation

Delight of glad’ning human hearts with gifts do they not know, Men of unpitying eye, who hoard their wealth, and lose it so?

 – Thirukkural: 228, Giving, Virtues