குருவிரொட்டி இணைய இதழ்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் – குறள்: 259


அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

– குறள் : 259

– அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை
நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தீயின்கண் நெய் முதலிய வுணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ; ஒரு விலங்கின் உயிரைப் போக்கி உடம்பைத் தின்னாமை நன்றாம்.



மு. வரதராசனார் உரை

நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.



G.U. Pope’s Translation

Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share.

 – Thirukkural: 259, The Renunciation of Flesh, Virtues