குருவிரொட்டி இணைய இதழ்

அருள்என்னும் அன்புஈன் குழவி – குறள்: 757


அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு. குறள்: 757

– அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அன்பு என்னும் நற்றாயினாற் பெறப்பட்ட அருள் என்னும் பிள்ளை; பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய வளர்ப்புத்தாயாலேயே பிழைக்கும்.



மு. வரதராசனார் உரை

அன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.



G.U. Pope‘s Translation

‘Tis love that kindliness as offspring bears;
And wealth as bounteous nurse the infant rears.

 – Thirukkural: 757, Way of Accumulating Wealth, Wealth