குருவிரொட்டி இணைய இதழ்

அரியவற்றுள் எல்லாம் அரிதே – குறள்: 443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். – குறள்: 443

– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்



கலைஞர் உரை

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல்
எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல், அரசர் பெறக்கூடிய அரும்பேறுக ளெல்லாவற்றுள்ளும் அரியதாம்.



மு. வரதராசனார் உரை

பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.