குருவிரொட்டி இணைய இதழ்

அறன்கடை நின்றாருள் எல்லாம் – குறள்: 142


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
– குறள்: 142

– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை
விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் ; பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண்போய் நின்றாரைப்போலப் பேதையாரில்லை .



மு. வரதராசனார் உரை

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.



G.U. Pope’s Translation

No fools, of all that stand from virtue’s pale shut out, Like those who longing lurk their neighbour’s gate without.

 – Thirukkural: 142, Not Coveting Another’s Wife, Virtues