குருவிரொட்டி இணைய இதழ்

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் – குறள்: 147


அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள்
பெண்மை நயவா தவன். – குறள்: 147

– அதிகாரம்:பிறனில் விழையாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே
அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுவன்; பிறனுக்கு உரிமைபூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான்.



மு. வரதராசனார் உரை

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.



G.U. Pope’s Translation

Who sees the wife, another’s own with no desiring eye In sure domestic bliss he dwelleth ever virtuously.

 – Thirukkural: 147, Not Coveting Another’s Wife, Virtues