குருவிரொட்டி இணைய இதழ்

அடுக்கி வரினும் அழிவு இலான் – குறள்: 625

அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.    – குறள்: 625

                – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்

விளக்கம்:

விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.

உதாரணம் (விளக்கப்படம்):

தடை தாண்டி ஓடும் போட்டியில் (Hurdles), தடகள வீரர்கள் அடுத்தடுத்து வரும் பல விதமான தடைகளையும் தாண்டி ஓடி, தங்களுடன் ஓடும் போட்டியாளர்களையும் வெல்ல வேண்டும். அது போல, பல துன்பங்கள்  அடுத்தடுத்து அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றைக் கண்டு மனம் கலங்காமல், மன உறுதியுடன் இருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே, அவனை விட்டு துன்பப்பட்டுப் போய்விடும்.