குருவிரொட்டி இணைய இதழ்

ஊதியம் என்பது ஒருவற்குப் – குறள்: 797


ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
– குறள்: 797

– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்



கலைஞர் உரை

ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத
ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு வரவுப்பேறு என்று சொல்லப்படுவது; அறிவிலாதாரோடு தெரியாமற் செய்துகொண்ட நட்பைவிட்டுவிட்டு, அவரிடத்தினின்று நீங்கிக்கொள்ளுதலாம்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்,



G.U. Pope’s Translation

‘Tis gain to any man, the sages say,
Friendship of folls to put away.

 – Thirukkural: 797, Investigation formatting Friendships, Wealth