குருவிரொட்டி இணைய இதழ்

இரட்டைக்கிளவி என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

இரட்டைக்கிளவி என்றால் என்ன?

அடுக்குத் தொடர் போல ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) இரட்டைக்கிளவி எனப்படும். ஆனால், இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தால் பொருள் தராது.

எடுத்துக்காட்டு

கட கட

கட கட என்று வண்டி ஓடியது. இதில் “கட” எனும் சொல் இருமுறை வருகிறது. இதேபோல் இருமுறை அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் தொடர்ந்து வந்தால் (கட கட, கட கட கட) மட்டுமே வண்டி வேகமாக ஓடுவதைக் குறிக்கும் பொருளில் அமையும். “கட” என்று ஒற்றைச் சொல்லாகப் பிரித்துச் சொன்னால் அதே பொருள் தராது.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்