குருவிரொட்டி இணைய இதழ்

அறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”

அறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”

அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் சிறப்புப் பாடங்கள் மற்றும் ஆய்வுகள் உண்டு. பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தொடர்பான படிப்புகளைக் குறிப்பிடும் சொற்களின் முடிவில் “ology” (“ஆலஜி”) என்ற சொல் சேர்த்து ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இந்தச் சொல்லின் பொருள் ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது அறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு (“study of a subject” or “a branch of knowledge”) என்பதாகும். இப்படி “ology” (“ஆலஜி”) என்று முடியும் படிப்புப் பிரிவுகள் சிலவற்றின் பட்டியலை இங்கு காண்போம்:

மனித இனவியல் – ஆந்த்ரபாலஜி (Anthropology) மனித இனம் பற்றிய ஆய்வு
தொல்லியல் – ஆர்க்கியாலஜி (Archaeology)பண்டைக்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவர்களது வாழ்விடங்கள் பற்றிய ஆய்வு
படிமவியல் – பேலியெண்டாலஜி – Palaeontology (Paleontology)மண்ணில் புதையுண்ட உயிர்மப் படிமங்கள் பற்றிய ஆய்வு
நிலயியல் – ஜியாலஜி (Geology)பூமியைப் பற்றிய ஆய்வு
கடலியல் – ஓஷனாலஜி – Oceanology (ஓஷனோகிராஃபி – Oceanography)கடல் பற்றிய ஆய்வு
வானிலை ஆய்வியல் – மீட்டியராலஜி (Meteorology)வானிலை பற்றிய ஆய்வு
காலநிலையியல் – க்ளைமெட்டாலஜி (Climatology)காலநிலை / தட்பவெப்ப நிலை பற்றிய ஆய்வு
நிலஅதிர்வியல் – சீஸ்மாலஜி (Seismology)பூமியில் ஏற்படும் நில அதிர்வுகள் பற்றிய ஆய்வு
தொழில்நுட்பம் – (Technology)அறிவியல் கண்டுபிடிப்புகளின் செயல்முறை மற்றும் தொழில்துறைப் பயன்பாடுகள் பற்றிய ஆய்வு
உயிரியல் – பயலாஜி (Biology)உயிரிகள் பற்றிய ஆய்வு
விலங்கியல் – ஜூவாலஜி (Zoology)விலங்குகள் பற்றிய ஆய்வு
நுண்ணுயிரியல் – மைக்ரோபயலாஜி (Microbiology)நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்வு
பாக்டீரியாலஜி (Bacteriology)பாக்டீரியாக்கள் பற்றிய ஆய்வு
வைராலஜி (Virology)வைரஸ்கள் பற்றிய ஆய்வு
எண்டமாலஜி (Entomology)பூச்சிகள் பற்றிய ஆய்வு
ஆர்னித்தாலஜி (Ornithology)பறவைகள் பற்றிய ஆய்வு
சூழ்நிலையியல் – எக்காலஜி (Ecology)உயிரிகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களைப் பற்றிய ஆய்வு
உடலியல் – ஃபிசியாலஜி (Physiology)உயிர்களின் உடலியக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு
இதயவியல் – கார்டியாலஜி (Cardiology)இதயம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலம் பற்றிய ஆய்வு
நரம்பியல் – நியூராலஜி (Neurology)நரம்பு மண்டலம் பற்றிய ஆய்வு
ஆஃப்தல்மாலஜி (Ophthalmology)கண்கள் பற்றிய ஆய்வு
டெர்மெடாலஜி (Dermatology)தோல் பற்றிய ஆய்வு
சைக்காலஜி (Psychology)உளவியல்
பல்மனாலஜி (Pulmonology)நுரையீரல் மற்றும் சுவாசமண்டலம் பற்றிய ஆய்வு
ரேடியாலஜி (Radiology)கதிரியக்கவியல்
எண்டோக்ரினாலஜி (Endocrinology)உட்சுரப்பியல்
எண்டோக்ரினாலஜி (Endocrinology)செரிமான மண்டலம் பற்றிய ஆய்வு
ஓடண்டாலஜி (Odontology)பற்கள் பற்றிய ஆய்வு
ஆன்காலஜி (Oncology)புற்றுநோயியல்
ஆஸ்டியாலஜி (Osteology)எலும்பியல்
இம்மியூனாலஜி (Immunology)நோய் எதிர்ப்பு பற்றிய ஆய்வு
ஹீமெட்டாலஜி (Hematology)குருதியியல்
ஹிஸ்டாலஜி (Histology) உயிர்த் திசுக்கள் பற்றிய ஆய்வு
மையாலஜி (Myology)தசையியல்
டயபெட்டாலஜி (Diabetology)நீரிழிவியல்
நெஃப்ராலஜி (Nephrology) சிறுநீரகவியல்
பேத்தாலஜி (Pathology)நோய்கள் பற்றிய ஆய்வு
ஃபார்மெக்காலஜி (Pharmocology)மருந்தியல்
ஆஸ்ட்ரோபயாலஜி – Astrobiology (எக்சோ பயாலஜி – Exobiology)விண்வெளியில் உள்ள உயிரிகள் பற்றிய ஆய்வு
காஸ்மாலஜி (Cosmology)அண்டவெளியின் இயல்பு மற்றும் தொடக்கம் பற்றிய ஆய்வு