குருவிரொட்டி இணைய இதழ்

பன்னாட்டு விண்வெளி வீரர்களின் ஆண்டின் மூன்றாவது விண்வெளி நடை (ஸ்பேஸ்வாக்)

பன்னாட்டு வீரர்களின் சென்ற விண்வெளி நடையை (ஸ்பேஸ்வாக் ISS Spacewalk) பார்க்கவில்லையா ? கவலை வேண்டாம்! இன்று மீண்டும் பன்னாட்டு விண்வெளி வீரர்கள், விண்வெளியில் நடக்க இருக்கிறார்கள்!

பன்னாட்டு விண்வெளி நிலையத்தைச் (ISS) சார்ந்த நாஸா-வின் (NASA) ஆன் மெக்க்லைன் (Anne McClain) மற்றும் கனடா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Canadian Space Agency) டேவிட் செயிண்ட்-ஜாக் (David Saint-Jacques) ஆகிய இருவரும், விண்வெளி நிலையத்தின் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக விண்வெளி நடையை (Spacewalk) மேற்கொள்ள இருக்கிறார்கள். 08-மார்ச்-2019, திங்கட்கிழமை, அமெரிக்க கிழக்குப் பகுதி நேரப்படி காலை 8.05 AM-க்கு (Eastern Time – EDT. அதாவது இந்திய நேரம் மாலை 05.35 PM) ISS வீரர்கள் விண்வெளி மையத்திற்கு வெளியே சென்று இந்தப் பணியை செய்வார்கள்.

இது இந்த ஆண்டின் மூன்றாவது ஸ்பேஸ்வாக் (Spacewalk) ஆகும். இது போலவே, சென்ற மார்ச் மாதம் இரண்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.

அமெரிக்காவின் நாஸா (NASA) நிறுவனம் இந்த அரிய நிகழ்வை, நேரடியாகப் படம் பிடித்து ஒளிபரப்புகிறது. இந்த ஒளிபரப்பு நாஸா தொலைக்காட்சி (NASA TV) யில் 08-மார்ச்-2019, திங்கட்கிழமை, அமெரிக்க கிழக்கு நேரப்படி காலை 6.30 மணிக்கு (அதாவது இந்திய நேரப்படி மாலை 4.00 மணி) தொடங்கும்.