குருவிரொட்டி இணைய இதழ்

விலங்கொடு மக்கள் அனையர் – குறள்: 410


விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரொடு ஏனை யவர். – குறள்: 410

அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதேன்அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

விளங்கிய நூல்களைக் கற்றவரொடு கூடியுள்ள மற்றக்கல்லாதவர்; பகுத்தறிவுள்ள உயர்திணை மக்களொடு கூடியுள்ள அஃறிணை விலங்குகள் போல்வர்.



மு. வரதராசனார் உரை

அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.



G.U. Pope’s Translation

Learning’s irradiating grace who gain,
Others excel, as men the bestial train.

 – Thirukkural: 410, Ignorance, Wealth