குருவிரொட்டி இணைய இதழ்

வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் – குறள்: 563


வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
– குறள்: 563

– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சியமாக விரைவில் அழியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து வாழுங் கொடுங்கோலனாயின், உறுதியாக விரைந்து கெடுவான்.



மு. வரதராசனார் உரை

குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.



G.U. Pope’s Translation

Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure.

 – Thirukkural: 563, Absence of Terrorism, Wealth