குருவிரொட்டி இணைய இதழ்

வேலொடு நின்றான் இடுஎன் – குறள்: 552


வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
– குறள்: 552

– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கொலைவரைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தாங்கிய ஆட்சியொடு கூடிய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல் ; கொல்லும் வேலை ஏந்திநின்ற வழிப்பறிக்கள்வன் வழிச்செல்வானை நோக்கி உன்கைப்பொருளைக் கீழே வை என்று சொல்வதனோ டொக்கும்.



மு. வரதராசனார் உரை

ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் ‘கொடு’ என்று கேட்பதைப் போன்றது.



G.U. Pope’s Translation

As ‘Give’ the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.

 – Thirukkural: 552, The Cruel Sceptre, Wealth