குருவிரொட்டி இணைய இதழ்

வலியார்முன் தன்னை நினைக்கதான் – குறள்: 250


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

– குறள்: 250

– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது,
தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு
இருப்பதை மறந்துவிடக் கூடாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் அருளில்லாமையால் தன்னினும் எளியவரை வருத்துமாறு அவர்மேற் செல்லும் பொழுது; தன்னினும் வலியவர் தன்னை வருத்தவரும்போது தான் அவர் முன் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க.



மு. வரதராசனார் உரை

(அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.



G.U. Pope’s Translation

When weaker men you front with threat’ning brow, Think how you felt in presence of some stronger foe.

 – Thirukkural: 250, The Possession of Benevolence, Virtues