குருவிரொட்டி இணைய இதழ்

வகைஅறச் சூழாது எழுதல் – குறள்: 465

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதுஓர் ஆறு.
– குறள்: 465

அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசன் தன் பகைவரை வெல்லுதற்கேற்ற வழிகளை யெல்லாம் தீர எண்ணாது, அரை குறையாய் எண்ணிய வளவில் அவர்மேற் படையெடுத்துச் செல்லுதல் ; அவரைப்பாதுகாப்பான நிலைமையிலிருந்து மேலும் வலியுறச் செய்வதொரு நெறியாம் .



மு. வரதராசனார் உரை

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.



G.U. Pope’s Translation

With plans not well matured to rise against your foe, Is way to plant him out where he is sure to grow!

 – Thirukkural: 465, Acting after due Consideration, Wealth



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link