குருவிரொட்டி இணைய இதழ்

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் – குறள்: 897


வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம்
தகைமாண்ட தக்கார் செறின்.
குறள்: 897

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான
வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஆக்க வழிப்பிற் கேதுவாகிய ஆற்றல் மாட்சிமைப்பட்ட மாதவர் அரசரை வெகுள்வாராயின், ஆறுறுப்புக்களும் மாட்சிமைப்பட்ட அவர் அரச வாழ்வும் அவர் தமக்குச் சொந்தமாக ஈட்டிவைத்த பெருஞ் செல்வமும் என்ன ஆகும்! ஒரு நொடியுள் வெந்து சாம்பராய் விடுமே!



மு. வரதராசனார் உரை

தகுதியால் சிறப்புற்ற பெரியார் ஒருவனை வெகுண்டால் அவனுக்குப் பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்?



G.U. Pope’s Translation

Though every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown?

.

Thirukkural: 897, Not Offending the Great, Wealth.