குருவிரொட்டி இணைய இதழ்

உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம் – குறள்: 933


உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்
போஒய்ப் புறமே படும்.
குறள்: 933

– அதிகாரம்: சூது, பால்: பொருள்.



கலைஞர் உரை

பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும்அவனைவிட்டு நீங்கிவிடும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் உருள்கின்ற கவற்றொடு சேர்த்த பணையத்தை இடைவிடாது சொல்லிச் சூதாடுவானாயின்;அவன் தேடிய செல்வமும் பொருள்வருவாயும் அவனை விட்டு நீங்கி எதிரிகளிடம் போய்ச் சேரும்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்



G.U. Pope’s Translation

If prince unceasing speak of nought but play,
treasure and revenue will pass from him away.

Thirukkural: 933, Gambling, Wealth.