குருவிரொட்டி இணைய இதழ்

உறின்உயிர் அஞ்சா மறவர் – குறள்: 778

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
– குறள்: 778

– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்



கலைஞர் உரை

தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை
ஆற்றுபவர்கள்தான், போர்க்களத்தில் உயிரைப்பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போர்வரின் இறப்பிற்கஞ்சாது மகிழ்ந்து போர்க்களத்திற்குச் செல்லும் மறவர்; தம் அரசன் அதுவேண்டாமென்று தடுப்பினும் தம் மறந்தளர்தல் இல்லை.



மு. வரதராசனார் உரை

போர் வந்தாலும் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.



G.U. Pope’s Translation

Fearless they rush where’er ‘the tide of battle rolls’;
The king’s reproof damps not the ardour of their eager souls.

 – Thirukkural: 778, Military Spirit, Wealth



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link