குருவிரொட்டி இணைய இதழ்

உடுக்கை இழந்தவன் கைபோல் – குறள்: 788

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு. – குறள்: 788

– அதிகாரம்: நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

அணிந்திருக்கும்  உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு   அதனைச  சரிசெய்ய  உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப்   போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அவையிடை ஆடையவிழ்ந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று திருத்தி அம் மானக்கேட்டை நீக்குவதுபோல, நண்பனுக்குத் துன்பம் வந்தவிடத்து அப்பொழுதே சென்றுதவி அதை நீக்குவதே ஒருவனுக்கு உண்மையான நட்பாகும்.



மு. வரதராசனார் உரை

உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.



G.U. Pope’s Translation

As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.

Thirukkural: 788, Friendship, Wealth