குருவிரொட்டி இணைய இதழ்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை – குறள்: 890


உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று
குறள்: 890

– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.



கலைஞர் உரை

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய
குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மனப்பொருத்த மில்லாதவரோடு கூடி வாழும் வாழ்க்கை; ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு கூடிவதிந்தாற்போலும்.



மு. வரதராசனார் உரை

அகத்தின் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

Domestic life with those who don’t agree,
Is dwelling in a shed with snake for company.

Thirukkural: 890, Enmity Within, Wealth.