குருவிரொட்டி இணைய இதழ்

துறந்தார் படிவத்தர் ஆகி – குறள்: 586


துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து
என்செயினும் சோர்வுஇலது ஒற்று.
– குறள்: 586

– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போல காட்டிக்
கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

முற்றத்துறந்த முனிவரின் கோலம்பூண்டு; புகுதற்குரிய விடமெல்லாம் கோடிவரை உட்புகுந்து ஆராயவேண்டியவற்றை யெல்லாம் ஆராய்ந்தறிந்து; அங்குள்ளவர் அயிர்த்துப் பற்றி நுண்சிதைப்புச் (சித்திரவதை) செய்யினும் வாய் சோர்ந்து தம்மை வெளிப்படுத்தாதவரே ,சிறந்த ஒற்றராவார்.



மு. வரதராசனார் உரை

துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவார்.



G.U. Pope’s Translation

As monk or devotee, through every hindrance making way,
A spy , whate’er men do must watchful mind display.

 – Thirukkural: 586, Detectives, Wealth