குருவிரொட்டி இணைய இதழ்

துன்பம் உறவரினும் செய்க – குறள்: 669


துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி
இன்பம் பயக்கும் வினை. – குறள்: 669

அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்



கலைஞர் உரை

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வினைசெய்யுங்கால் தமக்குத் துன்பம் மிகுதியாக வருமாயினும்; அது பற்றித் தளராமல் முடிவில் இன்பந்தரும் வினையை மனத்திண்மையுடன் செய்க.



மு. வரதராசனார் உரை

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்தபோதிலும் துணிவு மேற் கொண்டு செய்து முடிக்க வேண்டும்.



G.U. Pope’s Translation

Though toil and trouble face thee, firm resolve hold fast,
And do the deeds that pleasure yeild at last.

 – Thirukkural: 669, Power in Action, Wealth