குருவிரொட்டி இணைய இதழ்

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் – குறள்: 256


தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

– குறள்: 256

– அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லா திருப்பின்,
புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பேதைமை அல்லது குறும்புத்தனம் பற்றியல்லது ஊன் தின்பதற்காக உலகத்தார் உயிரிளைக் கொல்லாரெனின்;பொருள் பெறும் நோக்கத்தோடு ஊன் விற்பவரும் ஒருவரும் இரார்.



மு. வரதராசனார் உரை

புலால் தின்னும்பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவர்.



G.U. Pope’s Translation

‘We eat the slain,’ you say, ‘by us no living creatures die; Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy?

 – Thirukkural: 256, The Renunciation of Flesh, Virtues