குருவிரொட்டி இணைய இதழ்

தெரிதலும் தேர்ந்து செயலும் – குறள்: 634


தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
– குறள்: 634

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒரு வினையைச் செய்யும் வகைபலவாகத் தோன்றின் அவற்றுட் சிறந்ததை அல்லது முழுவாய்ப்பாகவுள்ளதை ஆராய்ந்து அறிதலும்; அங்ஙனம் அறிந்தபடி செய்யுங்கால் வெற்றிக் கேதுவான வழிகளைக் கையாளுதலும்; சிலரைப் பிரித்தல் பேணுதல் பொருத்தல் பற்றி இன்னதே செய்யத்தக்க தென்று திட்டவட்டமாகச் சொல்லுதலும்; வல்லவனே அமைச்சனாவான்.



மு. வரதராசனார் உரை

(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.



G.U. Pope’s Translation

A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive word.

 – Thirukkural: 634, The Officeof Minister of State, Wealth