குருவிரொட்டி இணைய இதழ்

தீயவை செய்தார் கெடுதல் – குறள்: 208


தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. – குறள்: 208

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்



கலைஞர் உரை

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய
செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர்க்குத் தீமையான வற்றைச் செய்தவர் அவற்றின் விளைவால் தப்பாது கெடுதல் எது போன்றதெனின்; ஒருவனது நிழல் அவன் எங்குச் செல்லினும் உடன் சென்று, இருள் வந்த விடத்துக்கண்ணிற்கு மறையினும் மீண்டும் ஒளியில் தோன்றுமாறு, என்றும் அவனை விட்டு நீங்காது அவன் காலடியிலேயே தங்கியதன்மையது.



மு. வரதராசனார் உரை

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.



G.U. Pope’s Translation

Man’s shadow dogs his steps wher’er he wends;
Destruction thus on sinful deeds attends.

 – Thirukkural: 208, Dread of Evil Deed, Virtues