குருவிரொட்டி இணைய இதழ்

தார்தாங்கிச் செல்வது தானை – குறள்: 767


தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
– குறள்: 767

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும்
ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பகைவரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரை விலக்கும் வகையறிந்து, அதற்கேற்பத் தன்னை வகுத்துக்கொண்டு; பகைவர் தூசிப்படையைத் தன்மேல் வராமல் தடுத்துத் தான் அதன்மேற் சென்று தாக்குவதே; சிறந்த படையாவது.



மு. வரதராசனார் உரை

தன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.



G.U. Pope’s Translation

A valiant army bears the onslaught, onward goes, Well taught with marshalled ranks to meet their coming foes.

 – Thirukkural: 767, The Excellence of an Army, Wealth