குருவிரொட்டி இணைய இதழ்

தனக்குஉவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு – குறள்: 7


தனக்குஉவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
– குறள்: 7

– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்



கலைஞர் உரை

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய திருவடிகளை அடைந்தார்க்கல்லாமல், மனத்தின்கண் நிகழுந்துன்பங்களையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.



மு. வரதராசனார் உரை

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.



G.U. Pope’s Translation

Unless His foot, ‘to Whom none can compare,‘ men gain,
‘Tis hard for mind to find relief from anxious pain.

 – Thirukkural: 7, The Praise of God, Virtues