குருவிரொட்டி இணைய இதழ்

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக – குறள்: 446


தக்கார் இனத்தனாய் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.
– குறள்: 446

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்
அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தக்க அமைச்சரைச் சுற்றமாகவுடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனை; பகைத்தவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்று மில்லை.



மு. வரதராசனார் உரை

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.



G.U. Pope’s Translation

The king, who knows to live with worthy men allied, Has nought to fear from any foeman’s pride.

 – Thirukkural: 446, Seeking the Aid of Great Men, Wealth