குருவிரொட்டி இணைய இதழ்

சலத்தால் பொருள்செய்து ஏமாக்கல் – குறள்: 660


சலத்தால் பொருள்செய்து ஏமாக்கல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீ இயற்று.

– குறள்: 660

– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற
நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அமைச்சன் வஞ்சனையாற் பொருளீட்டி அதனால் அரசனுக்குப் பாதுகாப்புச் செய்தல்; ஈரம் புலராத பச்சைமட் கலத்துள் நீரை வார்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்ததனோ டொக்கும்.



மு. வரதராசனார் உரை

வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்துள் நீரைவிட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

In pot of clay unburnt he water pours and would retain. Who seeks by wrong the realm in wealth and safety to maintain.

 – Thirukkural: 660, Purity in Action, Wealth