குருவிரொட்டி இணைய இதழ்

புகழ்பட வாழாதார் தந்நோவார் – குறள்: 237


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.
– குறள்: 237

– அதிகாரம்: புகழ், பால்: அறம்



கலைஞர் உரை

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புகழ்பட வாழாதார்-தமக்குப் புகழுண்டாக வாழாதவர்; தம் நோவார்-அது பற்றிப் பிறர் தம்மை யிகழ்ந்த விடத்து அதற்குக் கரணியமான தம்மையே நொந்து கொள்ளாது; தம்மை இகழ்வாரை நோவது எவன் – தம்மை யிகழ்ந்தவரை நோவது எதற்கு?



மு. வரதராசனார் உரை

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்துக்கொள்ளக் காரணம் என்ன?



G.U. Pope’s Translation

If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You ‘ ve yourself to blame.

 – Thirukkural: 237, Renown, Virtues