குருவிரொட்டி இணைய இதழ்

பொருள்கருவி காலம் வினைஇடனொடு – குறள்: 675


பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
– குறள்: 675

– அதிகாரம்: வினை செயல்வகை , பால்: பொருள்



கலைஞர் உரை

ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போர் செய்யுமுன் பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐவகையிலும்; தனக்கும் தன் பகைவர்க்கு முள்ள நிலைமைகளை மயக்கமற எண்ணி, தன்வலி மிக்கிருப்பின் அதன்பின் போர் செய்க.



மு. வரதராசனார் உரை

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.



G.U. Pope’s Translation

Treasure and instument and time and deed and place of act;
These five, till every doubt remove, think o’er with care exact.

 – Thirukkural: 675, The Method of Acting, Wealth