குருவிரொட்டி இணைய இதழ்

பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் – குறள்: 907


பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
குறள்: 907

– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.



கலைஞர் உரை

ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கும் ஒருவனின்
ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரிய தாகும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நாணமின்றித் தன் மனைவிக்கு ஏவல் தொழில் செய்து வாழ்பவனின் ஆண்டன்மையைவிட ; நாணமுள்ள ஒரு பெண்ணின் பெண்டன்மையே மேன்மை யுடையது.



மு. வரதராசனார் உரை

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.



G.U. Pope’s Translation

The dignity of modest womanhood excels
His manliness, obedient to a woman’s law who dwells.

Thirukkural: 907, Being led by Women, Wealth.