குருவிரொட்டி இணைய இதழ்

பயன்தூக்கார் செய்த உதவி – குறள்: 103


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. – குறள்: 103

– அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின்
காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று ஆராயாது ஒருவர் செய்த வுதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின்; அதன் நன்மை கடலினும் பெரியதாம்.



மு. வரதராசனார் உரை

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.



G.U. Pope’s Translation

Kindness, shown by those who weigh not what the returns may be; When you ponder right its merit, ‘Tis Vaster than the sea.

 – Thirukkural: 103, The Knowledge of Benefits Conferred: Gratitude, Virtues