குருவிரொட்டி இணைய இதழ்

பரியினும் ஆகாவாம் பால்அல்ல – குறள்: 376


பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. – குறள்: 376

– அதிகாரம்: ஊழ் , பால்: அறம்



கலைஞர் உரை

தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஊழால் தமக்கு உரிய வல்லாத பொருள்கள் வருந்திக் காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், ஊழால் தமக்குரிய பொருள்கள் வெளியே கொண்டுபோய்க் கொட்டினும் தம்மைவிட்டு நீங்கா.



மு. வரதராசனார் உரை

ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா.



G.U. Pope’s Translation

Things not your own will yeild no good, howe’er you guard with pain; You own, however you scatter them abroad, will yours remain.

Thirukkural: 376, Fate , Virtues