குருவிரொட்டி இணைய இதழ்

பகை நட்பாக்கொண்டு ஒழுகும் – குறள்: 874


பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புஉடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
குறள்: 874

– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.



கலைஞர் உரை

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு அமைதியுடன் ஒழுகும் பண்பாடுள்ள அரசனது பெருமையின் கீழ்; இவ்வுலகம் அடங்கி நிற்கும்.



மு. வரதராசனார் உரை

பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.



G.U. Pope’s Translation

The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.

Thirukkural: 874, Knowing the Quality of Hate, Wealth.